திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தோமி தாமஸ் பதவி விலக வேண்டும்! – மஸ்லி மாலிக்
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

தோமி தாமஸ் பதவி விலக வேண்டும்! – மஸ்லி மாலிக்

கோலாலம்பூர், பிப். 22-

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் அல்லது சட்டத்துறை தலைவர் பதவியிலிருந்து தோமி தாமஸ் விலக வேண்டுமென முன்னாள் கல்வியமைச்சர் மஸ்லி மாலிக் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி கைது செய்யப்பட்ட 12 பேருக்கு எதிரான விசாரணை தொடராது என தோமி தாமஸ் கூறியுள்ளார். இது உள்துறை அமைச்சு வகுத்த தேசிய பாதுகாப்பு கொள்கைக்கு முரணானது என சிம்பாங் ரெரங்காம் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தார். அவரின் புகைப்படத்தை இவர்கள் வைத்திருந்ததால் இவர்களும் தீவிரவாதத்தில் தொடர்புடையவர்கள் என சம்பந்தப்படுத்த முடியாது எனக் கூறி நேற்று சட்டத்துறை தலைவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்த மஸ்லி, உள்துறை அமைச்சு விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கும் வரை அவர்கள் பயங்கரவாதிகள். அதை காவல்துறையும் அரசாங்க அமைப்புகளும் பின்பற்ற வேண்டும் என்றார்.
சட்டத்துறை தலைவர் நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் இல்லையேல் பதவி விலக வேண்டும் என மஸ்லி வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன