திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > கோவிட் 19 வைரஸ்: மருத்துவமனையிலிருந்து 18 பேர் வெளியேறினர்
முதன்மைச் செய்திகள்

கோவிட் 19 வைரஸ்: மருத்துவமனையிலிருந்து 18 பேர் வெளியேறினர்

கோலாலம்பூர் பிப்ரவரி 23-

கோவிட் 19 வைரஸ் தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 நேயாளிகளில் 18 பேர் பூரணக் குணம் அடைந்துள்ளனர்.

இதர 4 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாகச் சுகாதார இயக்குனர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி 5ஆம் தேதி 40 வயதுடைய மலேசியப் பெண் இந்த வைரஸ் தொற்றுக் காரணமாகக் கெடாவில் உள்ள அலோர்ஸ்டார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் நேற்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன