திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பொதுக் கழிப்பிட வசதியின்மை! பொது மக்கள் அவதி!
சமூகம்முதன்மைச் செய்திகள்

பொதுக் கழிப்பிட வசதியின்மை! பொது மக்கள் அவதி!

பினாங்கு பிப்ரவரி 23-

பினாங்கு மாநிலத்தில் மாநகரசபையின் கீழ் செயல்பட்டு வரும் உணவுக் கூடங்களின் கட்டடங்கள் பலவற்றில் பொதுக் கழிப்பிட வசதி இல்லாதிருக்கும் பெருங்குறை, இங்கு வருகையளிக்கும் வாடிக்கையாளர்கள் பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரும்பாலும் உணவுக் கடைகளுக்கு வருகையளிக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு பொதுக் கழிப்பிட வசதி இருப்பது மிகவும் அவசியமென்பது ஒரு விதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் பட்சத்தில் இஃது இங்கு முற்றாக தவிர்க்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரிய சர்ச்சையாக எழுந்திருக்கிறது.

மாநிலத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் பிரதான நகரமான ஜோர்ஜ்டவுன் வட்டாரத்தில் ஜாலான் உத்தாமா, ஜாலான ஜெலுத்தோங் ஆகியப் பகுதிகளில் அமைந்திருக்கும் மாநகரசபை உணவகக் கட்டடங்களில் இந்த அவல நிலை நீண்ட காலமாகவே தலைதூக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜாலான் உத்தாமா சாலையிலுள்ள மாநகரசபை உணவகக் கட்டடத்தில் பொதுக் கழிப்பிட வசதி இல்லாதிருக்கும்
பெருங் குறையால் இங்கு உணவருந்த வருபவர்கள்,சிலர்  நெருக்கடி தாளாமல், அருகிலிருக்கும் சாக்கடையைப் பயன்படுத்திக் கொள்வது அம்பலமாகியிருக்கிறது.

பல்லின சமூகத்தினரும் தொழில் நடத்துகின்ற இத்தகைய உணவுக் கூடங்களை நிர்மாணித்திருக்கும் மாநகரசபையினர் பொது மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் இங்கு பொதுக் கழிப்பிட வசதியை ஏற்படுத்தாமல் புறக்கணித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக பினாங்கு இந்து இயக்கத் தலைவர் பி.முருகையா வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஏறத்தாழ 50க்கும் மேற்பட்டக் கூடங்களுடன் வித விதமான உணவுகள் விற்கப்படுகின்ற இத்தகைய உணவுக் கட்டடங்களில்
பொதுக் கழிப்பிட வசதிக்கும் மாநகரசபையினர் ஏற்பாடு செய்வது அத்தரப்பினரின் கடமையாக இருத்தல் வேண்டுமெனவும், இதை உணர்ந்து விரைவில் அவர்கள் ஆவன நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமெனவும் அவர் முறையிட்டுள்ளார்.

இதனிடையே ஜாலான் உத்தாமா, ஜாலான் ஜெலுத்தோங் ஆகியப் பகுதிகளில் அமைந்திருக்கும் மாநகரசபை உணவுக் கூடங்களீன் கட்டடங்களில் பொதுக் கழிப்பிட வசதிக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டுமென்று, இவ்விரு பகுதிகளுக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் பலர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதனால் இங்கு உணவருந்த வருபவர்கள் பலர் கழிப்பிட வசதி இல்லாத குறையால், அங்குமிங்கும் அலைமோதுகின்ற அவதியும் அல்லலும் பரிதாபகரமானதென்று என்றும், குறிப்பாக வயோதிகர்கள் பலர் இப்பிரச்சனையால் நிலை தடுமாறுகின்ற அவலம் வேதனையனது என்று பலரும் குறை கூறியிருக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன