திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ராகாவின் உலகளாவிய மகளிர் தின கொண்டாட்டம்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ராகாவின் உலகளாவிய மகளிர் தின கொண்டாட்டம்!

அனைத்து மலேசியர்களும் சர்வதேச மகளிர் தினத்தை (IWD) முன்னிட்டு ராகா மற்றும் DrYDrS Ftness பயிற்ச்சி மையம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள Zumba-வில் கலந்து பயன் பெறுவதோடு 2 முதல் 6 மார்ச் வரை, காலை மணி 6 முதல் 10 வரை ராகாவில் கலக்கல் காலை அங்கத்தில் இடம்பெரும் ஊக்கமிகு நேர்க்காணல்களையும் கேட்டுப் பயனடையலாம். Zumba நிகழ்வானது மார்ச் 8 ஆம் தேதி அன்று காலை மணி 10 முதல் மதியம் மணி 12 வரை நடைபெரும்.

SW Banquet Hall, Kompleks TLK, Brickfields-வில் இல் நடைபெரும் இந்நிகழ்வில் ராகா சாதனை ஹீரோ புகழ் டாக்டர் ஷாலினி ராமச்சந்திரன் பங்கேட்ப்பாளர்களுக்கு பயிற்ச்சி வழங்குவார். இரண்டு ஆண்டுகளாக சிறந்த முறையில் Zumba பயிற்றுவிக்கும் இவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பங்கேற்ப்பாளர்கள் இலவசமாகப் பங்குப்பெற்று பயனடையலாம்.

மேலும், ரசிகர்கள் காலை மணி 6 முதல் 10 வரையிலான கலக்கல் காலை அங்கத்தில் வாரம் முழுவதும் இடம் பெறவிருக்கும் ஊக்கமளிக்கும் நேர்காணல்களையும் கேட்டுப் பயன்பெறலாம்:

⦁ செவ்வாய், 3 மார்ச்: சமூக ஊடகங்களில் ராகா ரசிகர்கள் எழுப்பும் சில கேள்விகள் அல்லது சந்தேகங்களை டாக்டர் பிரவீனா பெண்களுக்கானப் பிரத்தியேக இலவச கிளினிக்கின் வழி தெளிவுபடுத்துவார். இவ்விலவச கிளினிக்கை ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் லைவ் வழியாக ஸ்ட்ரீம் செய்யலாம்.

⦁ புதன், 4 மார்ச்: RYTHM அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரான ஜெயமலர் சாமுவேல், புறநகரில் உள்ள பெண்களின் வாழ்க்கை குறித்துப் பேசுவார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் தொடர்பான வழக்குகளில் பணி விரிவான அனுபவம் கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

⦁ வியாழன், 5 மார்ச்: கலக்கல் காலை அறிவிப்பாளர், அஹிலா ‘Pad Woman’ என்று அழைக்கப்படும் புவனேஸ்வரியுடன் ஒன்றினைந்து கோலாலம்புரைச் சுற்றியுள்ள வீடற்ற பெண்களுக்கு sanitary pad-களை உள்ளடக்கிய சுகாதாரப் பொதிகளை வழங்குவார்.

⦁ வெள்ளி, 6 மார்ச்: மலேசியப் பெண் கலைஞர்களை உள்ளடக்கிய ஓர் இசையங்கம் இடம்பெரும்.

ராகாவின் உள்ளடக்க மேலாளர் சுப்பிரமணியம் வீராசாமி கூறுகையில் “சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மகளிர்களையும் கொண்டாடுவதில் ராகா மகிழ்ச்சியடைகிறது. மலேசியாவின் முதல் தர தமிழ் வானொலியான ராகா, இது போன்ற முயற்சிகளின் வழி பெண்களை ஊக்குவிக்கப்படுவதோடு அங்கீகரிக்கவும் செய்கிறார்கள் என்பதை நாங்கள் பெரிதும் நம்புகிறோம். மேலும், உள்ளூர் சமூகத்தினரைத் தொடர்ந்து ஊக்குவிப்பதோடு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். ”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன