கோலாலம்பூர் மார்ச் 3-

மாட்சிமை தங்கிய மாமன்னரை அவமதித்ததாகக் கைது செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திய இன்ஸ்பெக்டர் அப்துல் ஹமீட் பாடோ கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு மன நல பிரச்சனைகள் குறித்த மருத்துவப் பதிவு உள்ளது என்றார்.

புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் ”சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர்” என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக நேற்று குற்றவியல் புலனாய்வு துறை இயக்குனர் ஹுசிர் முகமட் ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் மாமனாரை அவமதித்ததாக ஒரு நபர் தடுத்துவக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

அதோடு அவர் வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை 1948 ஆம் ஆண்டுத் தேசதுரோக சட்டத்தின் பிரிவு 4 (1) (ஏ) , தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் நான்கு விசாரணைகளைத் தொடங்கி இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

கருத்துச் சுதந்திரத்தை போலீஸ் ஒருபோதும் தடுக்காது ஆனால் அது எல்லை மீறக் கூடாது என நினைவுறுத்தினார்.