திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மின்னலின் மகளிர் தினக் கொண்டாட்டத்தில் மேஜர் ஜெனரல் சூரியகலா!
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மின்னலின் மகளிர் தினக் கொண்டாட்டத்தில் மேஜர் ஜெனரல் சூரியகலா!

கோலாலம்பூர், மார்ச் 8-

நாட்டின் வளர்ச்சிக்கு மகளிர்களுடைய பங்களிப்பு அளப்பரியது. பெண்மையைப் போற்றும் இந்த தினத்தில், பெண்களின் சாதைனைகள், வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மின்னலில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அந்த வகையில் இன்றைய மின்னலின் காலைக் கதிரில் காலை 8.15 மணிக்கு சிறப்பு நேர்காணல் ஒன்று இடம் பெற்றது.

இதில் மேஜர் ஜெனரல் சூரியகலா சூரியபகவான் மற்றும் சில ராணுவ அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். சூரியகலா அண்மையில் ராணுவத்தில் முதல் இந்திய பெண் மேஜர் ஜெனரல் என்று பதவி உயர்வு பெற்று நமக்குப் பெருமை சேர்த்துள்ளார். நாட்டிலுள்ள பல பெண்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.

38 ஆண்டுகள் இராணுவத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய இவர், அவருடைய வெற்றிக்கு காரணமாக விளங்கிய தன்னுடைய அம்மாவின் அர்பணிப்பு, தியாகங்கள் போன்றவற்றை மிக உருக்கமாகப் பகிர்ந்துக் கொண்டார்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 60 வயது நிறைவடையவிருக்கும் இவர், சாதனைகளைப் படைக்கப் பெண்கள் தொடர்ந்து முயற்சி செய்து சிகரத்தை அடைய வேண்டும் என்று அவர் ஊக்கமும் உற்சாக வார்த்தைகளையும் நேயர்களுடன் பகிர்ந்துக்கொண்டார். இந்தியர்களுக்கு ஆயுதப் படையில் பொன்னான பல வாய்ப்புகளும் வசதிகளும் இருக்கின்றன என்றும் அதனை நாம் தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மேஜர் ஜெனரல் சூரியகலா சூரியபகவான் குறிப்பிட்டார்.

இதனுடைய காணொலி மற்றும் புகைப்படங்களைக் காண மின்னலின் https://www.facebook.com/RTMMINNALfm/
பக்கமாக வலம் வரலாம்.

இந்தச் சந்திப்பை மிகவும் கலகலவெனு சிறப்பாக வழி நடத்தினார் அறிவிப்பாளர் சத்யா. தாயாக, மனைவியாக, மகளாக, தங்கையாக, அக்காவாக, தோழியாக இப்படி தியாகங்களை தாண்டி பல அவதாரங்களை எடுத்துக் கொண்டிருக்கும் அனைத்துசிங்கப் பெண்களுக்கு மின்னலின் மகளீர் தின வாழ்த்துகள்! பெண்களை நேசிப்பதோடு, அவர்களை மதிப்போம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன