தமிழக முதல்வராவும் ஆசை இல்லை! – ரஜினிகாந்த்

சென்னை, மார்ச் 12-
முதல்வர் பதவியே எனக்கு வேண்டாம், என் ரத்தத்திலேயே அந்த ஆசை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தாம் தொடங்கும் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை இருப்பார். முதல்வர் பதவி எனக்கு வேண்டாம், என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். நீண்ட ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பின் தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த் தான் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சந்திப்பு நடத்தினார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.