திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மின்னல் பன்பலையில் சனிக்க்கிழமைகளில் இரவு மணி 10.15க்கு “சொல்லுங்க கேட்போம்”
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மின்னல் பன்பலையில் சனிக்க்கிழமைகளில் இரவு மணி 10.15க்கு “சொல்லுங்க கேட்போம்”

எத்தனையோ துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், பிரபலங்கள் மின்னல் பன்பலையின் “சொல்லுங்க கேட்போம்” நிகழ்ச்சியில் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையில் தங்களுக்கான இலக்கை அடையும் வழியில் அவர்கள் கடந்து வந்த அனுபவங்களையும், வாழ்க்கை பாடங்களையும் ஒலி வழியாய் உங்களுக்கு கொண்டு வருகிறோம்.

இவர்களின் இந்த சாதனைகள், அனுபவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு, நாம் அறிந்திராத பக்கங்கமும் உண்டு. அனைத்தையும் உங்களுக்காக. அலசி ஆராய்கின்றோம். சுவாரஸ்யங்கள் நிறைந்த “சொல்லுங்க கேட்போம்” நிகழ்ச்சி உங்களின் ஒவ்வொரு சனிக்கிழமை இரவையும் கலகலப்பாக்கப் போகின்றது.

யார் அந்த பிரபலங்கள், சாதனையாளர்கள்? என்ன சொல்லப் போகிறார்கள் இணைந்திருங்கள். இன்று இரவு மணி 10.15க்கு “சொல்லுங்க கேட்போம்” நிகழ்ச்சியில் வலம் வருகின்றார் இசா (ISAAA) அமைப்பின் உலக ஒருங்கிணைப்பாளரும், மலேசிய உயிரியல் தொழில்நுட்ப தகவல் மையத்தின் (MABIC) இயக்குனருமான மலேசிய விஞ்ஞானி, முனைவர் மகாலெட்சுமி அர்ஜுனன். நிகழ்ச்சியை வழி நடத்துகின்றார் அறிவிப்பாளர் மோகன். தயாரிப்பாளர் நளினி அச்சுதன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன