கோவிட் 19- மேலும் 125 சம்பவங்கள் பதிவு

புத்ராஜெயா, மார்ச் 16-

மலேசியாவில் கோவிட் 19 சம்பவங்களில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இன்று 125 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட 95 பேர் பெட்டாலிங் ஜெயா பள்ளிவாசலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்ற தகவலையும் அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதுவரையில் 553 கோவிட் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 42 பேர் குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சு, முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படுமெனக் கூறியுள்ளது