மார்ச் 31ஆம் தேதி வரை நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணை செயலாக்கம்! – பிரதமர்

மார்ச் 18ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணையை அரசாங்கம் பிறப்பித்திருக்கிறது

இது 1988 ஆம் ஆண்டில் தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது

1. முதல் கட்டமாக நாடு முழுவதும் அதிகமானோர் அதிகமானோர் ஒன்றுகூடும் பேரணிகள் அதேவேளையில் மதம் சார்ந்த நடவடிக்கைகள், விளையாட்டு, சமூக கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட வேண்டும் என அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இந்த ஆணையை அமல்படுத்துவதற்கு ஏதுவாக அனைத்து வழிபாட்டு தலங்களும் வணிகத் தளங்களும் மூடப்பட வேண்டும் என அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இதில் மளிகை கடை, பொது சந்தை, அங்காடி கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் அன்றாட தேவைகளை விற்கும் கடைகளுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

2.அடுத்ததாக இஸ்லாமியர்கள் அவர்களுடைய மத நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பதற்கு சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார் . இதில் வெள்ளிக்கிழமை தொழுகையும் அடங்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்

3. மலேசியர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது அதேவேளையில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் சுகாதார பரிசோதனை மேற்கொள்வது தன்னார்வ முறையில் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4. மலேசியாவில் அண்டை நாட்டவர்களும் சுற்றுப் பயணிகளும் வருவதற்கு அல்லது நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

5. மலேசியாவில் உள்ள அனைத்து அரசாங்க, தனியார் பள்ளிகளும் மழலையர் பள்ளிகளும், முழு ஆசிரம பள்ளிகளும் அனைத்து வகை பள்ளிகளும் பப்பீஸ் மையங்களும் இடைநிலை ஆரம்ப நிலை கல்வி கழகங்களும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கழகங்களும் மூடப்படுகின்றன.

6. அனைத்து அரசாங்க தனியார் அலுவலகங்களும் மூடப்படுகின்றன. ஆனால் இதில் நீர், மின்சாரம், எரிசக்தி, தொலைத்தொடர்பு, அஞ்சல், போக்குவரத்து, நீர்வளம், நீர் வினியோகம், எண்ணை, எரிபொருள், எரிவாயு ஒளிபரப்பு, நிதி, வங்கி, சுகாதாரம், மருந்தகம், தீயணைப்பு, சிறைச்சாலை, துறைமுகம், விமான நிலையம், பாதுகாப்பு, தற்காப்பு, துப்பரவு, சில்லறை வியாபாரம், உணவு விநியோகம் இது போன்ற முக்கியமான சேவைகள் தொடரும்