கோவிட் 19- மலேசியாவில் முதல் மரண சம்பவம் பதிவு

சரவாக் கூச்சிங்கில் 60 வயதான ஒரு நபர் -19 தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார். இது மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட முதல் கோவிட் 19 தொற்று மரணமாகும்.

கூச்சிங்கில் உள்ள தேவாலயத்தில் போதகராக இருந்த அந்த நபர் காலை 11 மணிக்கு சரவாக் பொது மருத்துவமனையில் காலமானார் என்று சரவாக் மாநில பேரிடர் மேலாண்மை குழு (ஜேபிபிஎன்) தெரிவித்துள்ளது.

“நோய்த்தொற்றின் மூலத்தை அடையாளம் காணும் பணியில் மாநில சுகாதாரத் துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

இதற்கிடையில், இறந்தவரின் 193 நெருங்கிய தொடர்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஜேபிபிஎன் சரவாக் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.