இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் 2 நாட்களுக்கு நாடு திரும்ப முடியாது! (விடியோ)

சென்னை, மார்ச் 18-

கோவிட் 19 பிரச்சினையின் காரணமாக மலேசியாவிற்குத் திரும்ப முடியாமல் தவிப்பவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் இந்தியாவிலேயே இருக்க வேண்டிய சூழல் எழுந்திருக்கின்றது.

விடுமுறையைக் கழிப்பதற்காகவும் சமய நிகழ்ச்சியின் காரணமாகக் குறிப்பாகத் தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களுக்குப் பயணமான மலேசியர்கள் நாடு திரும்புவதில் மிகப் பெரிய சிக்கலை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

மலேசிய விற்கான அனைத்து விமானங்களையும் இந்தியா ரத்துச் செய்திருக்கிறது. நேற்று சென்னை, திருச்சி விமான நிலையங்களில் மலேசியர்கள் மறியலில் ஈடுபட்ட செய்தியை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் 2 நாட்களுக்கு நாடு திரும்ப முடியாது!

சென்னை, மார்ச் 18-கோவிட் 19 பிரச்சினையின் காரணமாக மலேசியாவிற்குத் திரும்ப முடியாமல் தவிப்பவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் இந்தியாவிலேயே இருக்க வேண்டிய சூழல் எழுந்திருக்கின்றது.விடுமுறையைக் கழிப்பதற்காகவும் சமய நிகழ்ச்சியின் காரணமாகக் குறிப்பாகத் தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களுக்குப் பயணமான மலேசியர்கள் நாடு திரும்புவதில் மிகப் பெரிய சிக்கலை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.மலேசிய விற்கான அனைத்து விமானங்களையும் இந்தியா ரத்துச் செய்திருக்கிறது. நேற்று சென்னை, திருச்சி விமான நிலையங்களில் மலேசியர்கள் மறியலில் ஈடுபட்ட செய்தியை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.அதேபோல் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் குறித்த செய்தி வைரலாகப் பரவியது.இந்தியாவில் இருக்கும் மலேசியர்கள் மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ இஷாமூடின் கூறினார்.மலேசிய இந்திய காங்கிரசின் தலைவரும் மேலவை தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் ஆகியோர் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தத்தளிக்கும் 120 மலேசியர்கள் அநேகனிடம் தங்களின் தற்போதைய நிலவரத்தை பகிர்ந்து கொண்டனர்.

Posted by அநேகன் செய்திகள் on Tuesday, March 17, 2020

அதேபோல் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் குறித்த செய்தி வைரலாகப் பரவியது.

இந்தியாவில் இருக்கும் மலேசியர்கள் மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ இஷாமூடின் கூறினார்.

மலேசிய இந்திய காங்கிரசின் தலைவரும் மேலவை தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் ஆகியோர் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தத்தளிக்கும் 120 மலேசியர்கள் அநேகனிடம் தங்களின் தற்போதைய நிலவரத்தை பகிர்ந்து கொண்டனர்.