திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > அடங்கிப் போயிருக்கும் மிக நெரிசலான பாலம்
உலகம்முதன்மைச் செய்திகள்

அடங்கிப் போயிருக்கும் மிக நெரிசலான பாலம்

ஆதவன்

ஜொகூர் பாரு, மார்ச் 18-

உலகிலேயே மிக நெரிசலான தரைவழிப் பாதை (பாலம்) என அழைக்கப்பட்டு வந்த ஜொகூர் பாலம் இன்று அதிகாலை முதல் எந்தவொரு பயணியும் பயன்படுத்தாமல் மிக அமைதியாய் இருக்கின்றது.

மார்ச்சு 31 வரை நடைமுறையில் இருக்கும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை பிறப்பிக்கப்பட்ட்து முதல் இந்த மலேசிய சிங்கை எல்லைப் பாதை மூடப்பட்டிருக்கிறது.

அதிகாலை 4.00 மணி தொடங்கி காலை 9.00 மணி வரை வழக்கமாக இப்பாலத்தில் ஏற்படும் நெரிசல் ஏதும் இன்றி காணப்பட்டது.

ஜொகூர் பாரு பட்டணத்தையும் சிங்கப்பூரின் உட்லண்ட்சையும் இணைக்கும் 1.05 கிலோமீட்டர் நீளம் கொண்ட இப்பாலம் 1923இல் கட்டப்பட்டது.

மலேசியாவுக்குள் நுழையும் வருகையாளர்களில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் இப்பாலத்தையே பயன்படுத்தி வந்தனர்.

சிங்கப்பூரில் வேலை செய்யும் ஏறத்தாழ 250,000 மலேசியர்கள் இப்பாலத்தைக் கடந்து செல்கின்றனர். மிக அதிகமாக இருசக்கர வண்டியில் செல்லும் பயணிகள் இப்பாலத்தின் சுங்கச்சாவடி நெரிசலில் சிக்கிக் கொண்டு புற்றீசல் போல் குழுமியிருக்கும் காட்சியை நாம் ஒவ்வொரு நாளும் பார்க்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன