திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > ஞாயிறு முதல் இராணுவம் களம் காணும்! இஸ்மாயில் சப்ரி
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஞாயிறு முதல் இராணுவம் களம் காணும்! இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, மார்ச் 20-

கோவிட் -19 தொற்றை தடுப்பதற்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலைமையைக் கண்காணிக்க தேசிய போலீஸ் படைக்கு (பி.டி.ஆர்.எம்) உதவ இராணுவம் அழைக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

“இன்றைய நிலைமையைக் கண்காணிக்க இராணுவம் காவல்துறைக்கு உதவ வேண்டும் என்று கூட்டத்தில் இன்று முடிவு செய்தது, குறிப்பாக மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பதை உறுதிச் செய்வதற்கு இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுகின்றது என்றார் அவர்.

“ஞாயிற்றுக்கிழமை இராணுவம் அணிதிரட்டப்படும், எனவே கட்டுப்பாட்டுப் படையினரின் உதவி சாத்தியமாகும் என்று நாங்கள் நம்புகிறோம். அரசாங்கம் பிறப்பித்த கட்டளைகளுக்கு மக்கள் தொடர்ந்து கீழ்ப்படிவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன