திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > ஒப்ஸ் கோவிட்19 : ஒருவருக்கு மேல் வாகனத்தில் பயணித்ததற்காக காவல்துறை அபராதம் விதிக்கவில்லை!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஒப்ஸ் கோவிட்19 : ஒருவருக்கு மேல் வாகனத்தில் பயணித்ததற்காக காவல்துறை அபராதம் விதிக்கவில்லை!

கோலாலம்பூர், மார்ச் 21-

ஆதவன்

நடமாட்டக் கட்டுபாடு ஆணை நடைமுறை காலக்கட்டத்தில் பொருட்கள் வாங்க ஒரு வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்ததற்காக அபராதம் விதிக்கவில்லை என காவல் துறை கூறியுள்ளது.

பூச்சோங் வட்டாரத்தில் இது போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி குறித்து வினவியபோது, அது முற்றிலும் உண்மை இல்லை என பெர்னாமா நிறுவனம் வெளியிட்ட செய்தியொன்றில் செர்டாங் மாவட்டக் காவல் துறை தலைவர் ஏசிபி இஸ்மாடி போர்ஹான் தெரிவித்துள்ளார்.

பூச்சோங் வட்டாரத்தில் கடைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக கணவன் மனைவி ஆகிய இருவர் வீட்டை விட்டு வெளியே வந்ததால், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை மீறியச் செயல் எனக்கூறி காவல் துறையினர் 200 வெள்ளி அபராதம் விதித்ததாகப் பரவும் அச்செய்தி முற்றிலும் பொய் என ஏசிபி இஸ்மாடி போர்ஹான் கூறியுள்ளார்.

மேலும், புலனத்தில் பரவுல் அச்செய்தியில் வீட்டிலிருந்து கடைக்குப் பொருட்கள் அல்லது உணவு வாங்க வெளியேறுவோர் தனித் தனியாக வெளியேற வேண்டும் எனவும் குறிப்பிடப்படிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக நேற்று தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் காவல் நிலையத்தின் முன்புறம் நடத்தப்பட்ட சாலைப் பாதுகாப்பு பரிசோதனையில் காவல் துறையினர் அபராதம் ஏதும் விதிக்கவில்லை என பிரிக்ஃபில்ட்ஸ் மாவட்டக் காவல் துறை தலைவர் ஏசிபி சைருல்நிசாம் சைனுடின் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன