திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > நிபுணத்துவ மருத்துவர் உட்பட பேராவில் மேலும் இருவருக்கு கோவிட்-19 பாதிப்பு
சமூகம்முதன்மைச் செய்திகள்

நிபுணத்துவ மருத்துவர் உட்பட பேராவில் மேலும் இருவருக்கு கோவிட்-19 பாதிப்பு

ஆதவன்

ஈப்போ, மார்ச் 21-

இன்று (21-3-2020) நண்பகல் 12.00 வரை பேரா மாநிலத்தில் 45 பேருக்கு கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புதிதாகப் பாதிக்கப்பட்ட இருவர் தற்சமயம் ஈப்போ பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பேரா மாநில சுகாதார இலாகா இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அந்த இருவரில் ஒருவர் பேரா மாநிலத்தில் சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் நிபுணத்துவ மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொருவர் ஶ்ரீ பெட்டாலிங் சமயக் கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 63 வயது நிறம்பியவர் என டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

அவ்விருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு சமூக ஊடகங்களில் பரவும் பொய்த்தகவலைப் போல எந்தவித புதிய இறப்புச் சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை.

நாடு முழுக்க சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் கோவிட்-19 தொற்று கண்டிருப்பவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி சேவையாற்றிக் கொண்டிருப்பதாகவும் புதிதாகத் தொற்று கண்டிருப்பவர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மருத்துவப் பணியாளர்கள், கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆகியருக்கு எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் நலமுடன் இருக்க இறைவனை இறைஞ்சுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பொது மக்கள் வீட்டிலேயே இருப்பது மட்டும் இல்லாமல், ஒவ்வொருவரின் உடல் சுத்தத்தைப் பேணிக் காத்து மருத்துவப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன