திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > கோவிட் 19 : மலேசியாவில் 9ஆவது மரணம் பதிவு
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

கோவிட் 19 : மலேசியாவில் 9ஆவது மரணம் பதிவு

கங்கார், மார்ச் 22-

கோவிட் 19 தொற்று காரணமாக மலேசியாவில் மரண எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது வரை 9 மலேசியர்கள் இந்த தாக்குதலின் காரணமாக உயிரிழந்துள்ளார்கள்.

தற்போது சுகாதார அமைச்சு சார்ந்த மருத்துவர் இந்த நோய் தொற்று காரணமாக உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த மருத்துவ நிபுணர் துங்கு ஃபுஸியா மருத்துவமனையில் இன்று காலை மரணமடைந்ததாக சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக மரணமடைந்த மருத்துவ நிபுணர் துர்க்கிற்கு பயணம் செய்திருந்தார் என்பது அறியப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன