திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கோவிட் 19: அரசாங்கம் அறிவித்துள்ள சலுகைகள்!
அரசியல்முதன்மைச் செய்திகள்

கோவிட் 19: அரசாங்கம் அறிவித்துள்ள சலுகைகள்!

கோலாலம்பூர். மார்ச் 23-

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலக்கட்டத்தில் பொது மக்கள் வாழ்க்கைச் செலவினங்கள் தொடர்பாக பிரதமர் முகைதீன் யாசின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

– பொது மக்களின் அடிப்படை வாழ்க்கைச் செலவினங்களுக்காக KWSP தொழிலாளர் சேமநிதியின் 2ஆம் கணக்கிலிருந்து ஏப்ரல் முதல் அடுத்த 12 மாதங்கள் வரை மாதம் ஒன்றுக்கு 500 வெள்ளியை பெற்றுக் கொள்ளலாம்.

– சுகாதார அமைச்சுக்குத் துணைபுரிய ஒப்பந்த அடிப்படையில் நாடு முழுவதும் புதிதாக 2000 மருத்துவப் பணியாளர்கள் (குறிப்பாக தாதியர்கள்) வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

– சுகாதார அமைச்சுகு மத்திய அரசு கூடுதலாக 500 மில்லியன் மானியத்தை ஒதுக்கியுள்ளது. இதன் வழி சுவாசப் பிரச்சனை இயந்திரங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு கருவிகள், பரிசோதனைக் கருவிகள் வாங்க உடனடி வழி வகை செய்ய உதவும்.

– பிடிபிடிஎன் கடனைத் திரும்பச் செலுத்தும் காலக்கட்டம் செப்டம்பர் 30 வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

– ஒவ்வொரு மாநில அரசுக்கும் மத்திய அரசு 130 மில்லியன் வெள்ளி மானியத்தை ஒதுக்கியுள்ளது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில் செய்பவர்களும், நடுத்தர வியாபாரிகளுக்கும், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும், மாநில அளவிலான மருத்துவப் பணியாளர்களின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு இந்த நிதியைப் பயன்படுத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன