திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கோவிட் 19: உங்களுக்கு உதவித் தேவையா? எங்களை நாடலாம் – டிரா சரவணன்
சமூகம்முதன்மைச் செய்திகள்

கோவிட் 19: உங்களுக்கு உதவித் தேவையா? எங்களை நாடலாம் – டிரா சரவணன்

12 பொது அமைப்புகளின் ஒருங்கிணைப்பான, கோவிட் -19 ஆதரவு குழுவினராகிய நாங்கள், அத்தொற்று நோயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட B40 குடும்பங்களுக்கு உதவ முன்வந்துள்ளோம்.

இந்த சவாலான காலக்கட்டத்தில், இதனால் பாதிக்கப்படக்கூடிய சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் எங்களால் இயன்ற அளவில் ஆதரவை வழங்க விரும்புகிறோம்.

பலதரப்பட்ட சமூகங்களுக்கு மத்தியில் தொடர்ந்து இயங்கி வருவதன் அடிப்படையில், பின்வரும் இலக்கு குழுக்கள் அதிகம் பாதிக்கப்படுவர் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்:

 1. குறைந்த வருமானம் பெறும் மற்றும் தினசரி வருமானத்திற்காக உழைக்கும் B40 தரப்பினர்
 2. முதியவர்கள்
 3. இப்பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்த பணியாற்றும் முன்வரிசை பணியாளர்கள்
 4. முறையான ஆவணங்கள் உடைய அல்லது ஆவணங்கள் இல்லாத மலேசியாவில் உள்ள வெளிநாட்டினர்
 5. பட்டியலிடப்படாத பிற பாதிக்கப்பட்ட குழுவினர்

மேற்குறிப்பிட்ட தரப்பினர் தங்களுக்குத் தேவையான உதவிகள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உதவிகள் நல்கப்படுகின்றன:-

 1. ஏழைக் குடும்பங்களுக்கான தற்காலிக மளிகைப் பொருள்கள் உதவி
  • குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தங்கள் அடிப்படை தேவையை புர்த்தி செய்யும் வகையில் மளிகைப்
 2. பொருள்களும் மற்ற உதவிகளும் வழங்கப்படும்.
 3. ஏழை நோயாளிகளுக்கான போக்குவரத்து உதவி
  • வயதானவர்கள், குழந்தைகள், டயாலிசிஸ் நோயாளிகள் மற்றும் புற்றுநோய் நோயாளிகள் மருத்துவமனைக்குச்
 4. செல்வதற்கான இலவச போக்குவரத்து வசதி அளிக்கப்படும்
 5. கோவிட் – 19 தொற்றுநோய் குறித்த ஐயங்கள், அதன் அண்மைய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ள தொலைபேசி சேவை
 6. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் வாங்க உதவுதல்
 7. பிற அவசர தேவைகளுக்கான உதவிகள் (தேவையின் அடிப்படையில்)

எவரும் விடுபட்டுவிடக் கூடாது எனும் நிலையான மேம்பாட்டு இலக்கை அடைவதில் எங்களின் கடப்பாட்டை உறுதி செய்யும் வகையில், வழங்கப்படும் இந்த உதவியானது மலேசியாவில் தேசிய அளவில் இந்த உலகளாவிய பெருந்தொற்று நோயை நிர்வகிக்க உதவும் என எதிர்பார்க்கின்றோம்.

மேற்காணும் உதவிகள் பெறுவதற்குத் தகுதியுடையவராக நீங்கள் இருப்பின் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளவும்:

குறிப்பு :

உதவிப் பெற தகுதிப் பெற்றவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டப் பிறகே உதவிகள் வழங்கப்படும்.

செயலகம்:

டிரா மலேசியா
மோனா 0177803054
லீ 017 852 6083
ஜாஸ்லின் நடியா 0112892 7518
இரகு பாலன் 0164271905
முகமட் பியாஸ் 0185734331

MySkills அறவாரியம்:
தேவா – 012 346 5212
வைஜந்தி – ‭012 906 3073‬
சிவப்பிரியா – ‭010 273 2981‬
மாலதி – ‭013 338 3036‬

WhatsApp அனுப்புவதற்கு மட்டும் – 012 205 8703
“எல்லாவற்றிற்கும் மேலாக, பெருந்தொற்று நோய்களின் போது அச்சுறுத்தலுக்கு உள்ளாவது மனிதநேயம் தான்”
-டாக்டர் மார்கரெட் சான்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன