திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கோவிட்-19 : சட்டமற்ற உறுப்பினர்களுக்கு 20,000 வெள்ளி ஒதுக்கீடு : அகமாட் பைசால்
அரசியல்முதன்மைச் செய்திகள்

கோவிட்-19 : சட்டமற்ற உறுப்பினர்களுக்கு 20,000 வெள்ளி ஒதுக்கீடு : அகமாட் பைசால்

ஈப்போ, மார்ச் 24-

பேரா மாநிலத்தின் அனைத்து 59 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 20,000 வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அம்மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அகமாட் பைசால் அசுமு இன்று காலை பேரா பண்பலைக்கு அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

கோவிட்-19 தொற்றால் தற்சமயம் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடைமுறையில் உள்ளது. இதனால் மக்களின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் மக்களின் நலன் பாதுகாக்க கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து 59 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அவர் கூறினார்.

மாநிலப் பொருளாதாரப் பிரிவு தற்சமயம் அதற்கான ஆவனப் பணியில் இருக்கிறது. அதனை நாளை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கிடைக்கும்படி செய்வதாகவும் எல்லா 59 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒட்டுமொத்தமாக 1,180,000 வெள்ளி நிதி ஒதுக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன