திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ட்டோன் – ஆளில்லா வீமானங்கள் வழி நடமாட்டக் கண்காணிப்பு !
அரசியல்முதன்மைச் செய்திகள்

ட்டோன் – ஆளில்லா வீமானங்கள் வழி நடமாட்டக் கண்காணிப்பு !

கோலாலம்பூர், மார்ச் 24-

மலேசிய ஆயுதப்படை ட்ரோன், ஆளில்லா விமானங்களைக் கொண்டு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய உள்ளது.

இதன் தொடர்பில் ஆயுதப்படை தளபதி ஜெனரல் தான் ஶ்ரீ அஃபெண்டி புவாங் தெரிவிக்கையில், ட்ரோன் தொழில்நுட்பம், பயன்படுத்தப்படும் எண்ணிக்கை குறித்து உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாகவும் ட்ரோன் இன்னும் அதிகமாகத் தேவை இருப்பதால் அதன் எண்ணிக்கையை அதிகரிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இன்னும் இரண்டொரு நாட்களில் பயன்பாட்டில் இருக்கவிருக்கும் இந்த முறையின்வழி கண்காணிப்புப் பணி அனைத்து இடங்களிலும் முழுமையாக இடம்பெற்றிருக்கும் என்பதை ஆர்டிஎம் 1 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன