திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கோவிட் 19 : அதிகமான சம்பவங்கள் பதிவான வட்டாரங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்!
அரசியல்முதன்மைச் செய்திகள்

கோவிட் 19 : அதிகமான சம்பவங்கள் பதிவான வட்டாரங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்!

கோலாலம்பூர், மார்ச் 24-

சிவப்பு நிற அபாயக் குறியீடு வட்டாரங்களில் பாதுகாப்பு மேலும் வலுக்கும் சிவப்பு நிற அபாயக் குறியீடு அளவையின் பட்டியலிடப்பட்டிருக்கும் வட்டரங்களில் கூடுதல் காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தி நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை வலு பெறச் செய்யப்படும் என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ ஶ்ரீ மஸ்லான் லாசிம் கூறினார்.

சிவப்பு நிற அபாயக் குறியீடு அளவையின் பட்டியலிடப்பட்டிருக்கும் கெப்போங், தித்திவாங்சா, லெம்பா ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் இன்னும் ஆணையைப் பின்பற்றாமல் பிடிவாதமாக இருப்பதால் இவ்விடங்களில் கட்டுப்பாடு வலுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையைப் பின்பற்றாதவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கோலாலம்பூர் – புத்ராஜெயா ஆகிய வட்டாரங்களில் 51 சாலைத் தடுப்புகள் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3,127 காவல் துறை அதிகாரிகளுடன் 420 ஆயுதப்படை வீரர்களும் தற்போது இப்பணியில் ஈடுபடுவதோடு அவ்வப்போது ரோந்துப் பணிகளிலும் ஈடுபவதாக அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன