திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > கோவிட் 19: 15ஆவது மரணச் சம்பவம் பதிவு!
மற்றவை

கோவிட் 19: 15ஆவது மரணச் சம்பவம் பதிவு!

கோலாலம்பூர், மார்ச் 24-

கோவிட் 19 தொற்றுக் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா தமது சமுகத் தளத்தில் அறிவித்துள்ளார்.

1519ஆவது நபராக இந்த தொற்றின் காரணமாக மூவார் சுல்தானா பாத்திமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை 5.35 மணிக்கு உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

71 வயதான அந்த மலேசியர், அண்மையில் பெட்டாலிங் ஜெயாவில் நடந்த தப்லிப் ஒன்றுகூடலில் கலந்து கொண்டவருடன் தொடர்பில் இருந்தவர் என்றும் நோர் ஹிசாம் குறிப்பிட்டார்.

கோவிட் 19 தொற்று உலக அளவில் 100,000 பேருக்கு 4 நாட்களில் பரவியுள்ளது என்ற தகவலையும் உலகச் சுகாதார மையம் அறிவிதுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன