திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சாலைத் தடுப்புகளில் நெரிசல்; இன்னும் ஆணையைப் பின்பற்றவில்லை!
அரசியல்முதன்மைச் செய்திகள்

சாலைத் தடுப்புகளில் நெரிசல்; இன்னும் ஆணையைப் பின்பற்றவில்லை!

கோலாலம்பூர், மார்ச் 24-

தலைநகரில் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளில் நெரிசல் அதிகமாகக் காணுப்படுதற்கு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை இன்னும் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை எனத் தெரிய வருகிறது.

இன்று காலை 9.00 மணி அளவில் கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் தலைநகரை நோக்கி வரும் வழி சுமார் 1 கி.மி. தூரம் நெரிசலாகக் காணப்பட்டது.

சன்வே பிரமிட்டுக்கு அருகே என்.பி.இ. நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது என பெரித்தா ஹாரியான் செய்தி வெளியிட்டிருந்தது.

முறையான காரணமில்லாமல் மக்கள் நடமாட்டம் இன்னும் நிகழ்ந்துகொண்டுதான் இருப்பது தெரிய வந்துள்ளது.

நேற்றைக் காட்டிலும் இன்று கோலாலம்பூர்-சிரம்பான் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஸ்டீவன் எல்லி தெரிவித்தார். இருந்தாலும், யாருக்கும் சம்மன் ஏதும் வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

உறவினர்களைச் சந்திக்கப் போவதாகக் கூறுவோரை நாங்கள் திருப்பி அனுப்பியுள்ளோம். வேலைக்குச் செல்ல முறையான ஆவணம் உள்ளவர்கள், மருத்துவமனைக்குச் செல்வோர் ஆகிவர்களை மட்டும் அனுமதிப்பதாகவும் அவர் விளக்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன