திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கோலாலம்பூர் பாசார் போரோங் செயல்படும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள் : காவல்துறை
சமூகம்முதன்மைச் செய்திகள்

கோலாலம்பூர் பாசார் போரோங் செயல்படும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள் : காவல்துறை

செலாயாங், மார்ச் 24-

செலாயாங்கில் இருக்கும் கோலாலம்பூர் மொத்த வியாபாரச் சந்தை (பாசார் போரோங்) செயல்படும் நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கோவிட்-19 தொற்று பரவாமல் இருக்கவே இக்கட்டுப்பாடு தேவை என கோலாலம்பூர் காவல்து படைத் தலைவர் ட்த்தோ ஶ்ரீ மஸ்லான் லாசின் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின்போது கோலாலம்பூர் பாசார் போரோங்கில் வெளிநாட்டவர்களை உட்படுத்திய நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, பாசார் போரோங் செயல்படும் நேரம் குறித்து அதன் நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இங்கிருக்கும் 440 கடைகளில் தலா 5 வேலையட்கள் வீதம் ஏறத்தாழ 2200 பேர் இருக்கின்றனர். இவ்வெண்ணிக்கையில் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை சேர்க்கப்பட வில்லை.

கடந்த 19 மார்ச் முதல் காவல்துறையினர் இவ்விடத்திற்கு வரும் வழியில் இரண்டு சாலைத் தடுப்பை அமைத்து உள்ளூர் வெளியூர் வேளையாட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அவ்வப்போது ரோந்துப் பணியும் மேற்கொள்ளபட்டு வருகின்றது. அப்போது வெளியே இருப்பவர்களை வீட்டிற்குச் செல்ல கட்டளையிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்சமயம் கோலாலம்பூர் பாசார் போரோங்கில் 138 காவல் துறையினர் கட்டுப்பாட்டுப் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன