திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > கோவிட் 19: இன்று 106 ச்மபவங்கள் பதிவு! 15 பேர் மரணம்: மொத்த எண்ணிக்கை 1624
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

கோவிட் 19: இன்று 106 ச்மபவங்கள் பதிவு! 15 பேர் மரணம்: மொத்த எண்ணிக்கை 1624

கோலாலம்பூர், மார்ச் 24-

கோவிட் 19 தொற்று காரணமாக இன்று 106 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.

இதுவரையில் பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 1,624ஆக அதிகரித்துள்ளது. மிகக் குறிபாக இதுவரையில் இந்த நோய் தொற்று காரணமாக 15 மரணமடைந்துள்ளார்கள்.

இன்று பதிவான 106 சம்பவங்களில் 46 பேர் ஶ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடந்த தப்லிப் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். இந்நிலையில் 64 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 24 பேர் இயந்திர சுவாச உதவியுடம் சுவாசிக்கின்றார்கள்.

இன்று இந்த நோய் தொற்றிலிருந்து 24 பேர் குணமடைந்துள்ளார்கள். இதன் மூலம் குணமடந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 183ஆக உயர்ந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன