திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > கோவிட் 19 : இன்று 235 சம்பவங்கள் பதிவு! 23 பேர் மரணம்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

கோவிட் 19 : இன்று 235 சம்பவங்கள் பதிவு! 23 பேர் மரணம்

கோலாலம்பூர், மார்ச் 26-

கோவிட் 19 தொற்று காரணமாக இன்று 235 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் 23 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார தலைமை இயக்குநர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.

இதுவரையில் பதிவான சம்பவங்களில் இதுதான் மிக அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இந்த நோய் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த என்ணிக்கை 2,031ஆக அதிகரித்துள்ளது.

இன்று பதிவான 235 சம்பவங்களில் 60 ஶ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடந்த தப்லிப் கூட்டத்துடன் தொட்ரபுடையது என டாக்டர் நோர் ஹிசாம் கூறினார்.

இதனிடையே 45 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சேக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 32 பேருக்கு செயற்கை சுவாச கருவி உதவி வழங்கப்பட்டுள்ளதாக இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார். இன்று இந்த நோய் தொற்றின் காரணமாக 4 பேர் மரணமடைந்துள்ளார்கள். அதன் மொத்த எண்ணிக்கை 23ஆம் உயர்ந்துள்ளது.

இன்று 16 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளார்கள். அதன் காரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 215ஆம் அதிகரித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன