திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > 2 வயது குழந்தைக்கு கோவிட்-19 தொற்று
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

2 வயது குழந்தைக்கு கோவிட்-19 தொற்று

குவாந்தன், மார்ச் 26-

கோவிட்-19 தொற்றால் இரண்டு வயது குழந்தை பாதிக்கப்படுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இரத்தப் புற்று நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள அக்குழந்தை சிகிச்சைக்காக கிளாந்தானில் அமைந்துள்ள மலேசிய அரிவியல் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆனால், கோவிட்-19 தொற்று கண்டிருப்பதால் அக்குழந்தையின் இரத்தப் புற்றுநோய் சிகிச்சை தற்சமயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று கண்டுள்ள மிக இளமையான நோயாளி இக்குழந்தை எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அக்குழந்தை கோத்தாபாரு ராஜா பெரம்புவான் சைனாப் II மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது குடும்பத்தாரின் வழியாக இந்நோய் பரவியிருப்பதாகவும் கிளாந்தான் மாநில சுகாதார இலாகா உறுதிப்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன