திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பினாங்கு மக்களுக்கு மக்கள் சக்தி கட்சி உதவி!
சமூகம்முதன்மைச் செய்திகள்

பினாங்கு மக்களுக்கு மக்கள் சக்தி கட்சி உதவி!

கோவிட் 19 நோய் தொற்றுக் காரணமாக அரசாங்கம் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை பிறப்பித்தது முதல், பலர் பல்வேறான இன்னல்களை எதிர்நோக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் வசதி குறைந்தவர்களுக்கான உதவிகளை நாட்டிலுள்ள பல அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில் மலேசிய மக்கள் சக்தி கட்சி பினாங்கு மாநிலத்தில் கப்பாளா பத்தாஸ் பகுதியில் உள்ள வசதி குறைந்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் பினாங்கு மாநில தலைவருமான டத்தோஶ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தலைமையில் மாநில செயலாளர் கோகேஸ்ந்திரன், சாந்தி ஆகியோர் இந்த உதவிப்பொருட்களை வழங்கினார்கள்.

அதோடு மக்கள் சக்தி கட்சியின் நெகிரி செம்பிலான் மாநில தலைவர் டத்தோ சரவணகுமார் நீலாய் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு 200 நாசி கண்டார் உணவு பொட்டலங்களை வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன