RAP Porkalam: 8 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்!

கோலாலம்பூர், மார்ச் 26-

மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியான, RAP Porkalam-இன் 8 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர். 29 ஜனவரி முதல் 4 பிப்ரவரி 2020 வரை நடைப்பற்ற வாக்களிப்பில் சுமார் 327,000-க்கும் மேற்ப்பட்ட ஆன்லைன் வாக்குகள் அடிப்படையில் இவ்வெட்டு போட்டியாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர். போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள் பட்டியல் பின்வருமாறு:

போட்டியாளர்கள் முதல் சுற்றில் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை

ரூபன் ராஜ் –  33,806
சிஜேஎல் –  28,618
சில்வர்ஸ்டேட் தமிழன் –  26,307
ஈஷா –  25,621
நரேன் ஜாக் –  25,443
கேவின் –  25,051
தேசல்தேக் –  24,737
மதராசி –  23,844

இதற்கிடையில், வாக்குகளில் சிறிய வித்தியாசம் அடிப்படையில் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற இயலாத தாரகை, சி.ஜே.சதீஷ், மிஸ்டா நேஷ், பூச்சி, ராகிக் விஷூன், லூசிபர், ஏ.கே.ஷோன் மற்றும் வீல்சார் ராப்பர் போட்டியை விட்டு வெளியேறினர்.

8 சிறந்த போட்டியாளர்களும் RAP Porkalam-இன் இறுதிச் சுற்றுக்கு தங்களை தகுதி பெறச்செய்ய இரண்டாம் சுற்றில் மிக கடுமையாகவும் விவேகமாகவும் போட்டியிடுவர். RAP Porkalam-இன் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7 மணிக்கும் மற்றும் மறுஒளிப்பரப்பை ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கும் விண்மீன் எச்.டி. (அலைவரிசை 231), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் கண்டு மகிழலாம். மேல் விவரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.