பேரா மாநிலம மந்திரி பெசார் இரண்டு மாதச் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினார்

ஈப்போ, மார்ச் 27-

கோவிட்-19 தொற்றால் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடைமுறை கண்டதைத் தொடர்ந்து பேரா மாநில பேரிடர், சமூக நல நிதிக்காக தனது இரண்டு மாதச் சம்பளத்தை பேரா மாநில முதல்வர் நன்கொடையாக வழங்குவதாக தனது செய்தி அறிக்கையில் தெரிவித்தார்.

பிரதமர் உட்பட ஒட்டுமொத்த அமைச்சரவையும் தங்களின் இரண்டு மாதச் சம்பளத்தை பேரிடர், சமூக நல நிதிக்காக வழங்கியதைத் தொடர்ந்து தாமும் இவ்வாறு வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த நிதிக்காக நன்கொடை வழங்க தனியார் நிறுவனங்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மாநில பொருளகப் பிரிவின் வழி தங்களின் உதவி நிதியை வழங்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

Tabung Bencana dan Bantuan Sosial Negeri Perak
Bendahari Negeri Perak
CIMB Islamic 8601170183