கோலேஜ் கம்மியுனிட்டி, போலிடெக்னிக் ஆகியவையின் டிப்ளோமா, சான்றிதழ் தேர்வுகள் நடத்தப்படாது!

கோலாலம்பூர், மார்ச் 27-

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடைமுறையில் இருப்பதால் கோலேஜ் கம்மியுனிட்டி, போலிடெக்னிக் ஆகியவையின் டிப்ளோமா, சான்றிதழ் தேர்வுகள் நடத்தப்படாது என உயர்கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

மேலும், இவ்விரு உயர்கல்வி நிலையங்களும் கோவிட்-19 தொற்று கண்டவர்களுக்கான தனிமைப்படுத்தப்படும் மையமாக உருமாறி இருப்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டது என இன்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

இதன் தொடர்பில் மாணவர்களின் அடைவுநிலையை தொடர்ச்சியான மதிப்பீட்டின் வழி முடிவு செய்யப்படும் எனவும், இன்னும் உயர்கல்விக் கூடங்களில் தங்கியிருக்கும் மாணவர்கள் தொடர்ந்து அங்கேயே இருக்கும்படியும் அமைச்சு அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

மேலும், போலிடெக்னிக்கின் இளங்கலைப் பட்டப் படிப்பு மாணவர்கள் தொடர்பாக வேறோர் அறிக்கையில் தெரிவிப்பதாகவும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்தது.