பாமர மக்களுக்கு தொடர்ந்து உதவி புரியும் தர்மராஜா!

ரவுப், மார்ச் 30-

நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் உத்தரவை மார்ச் 18ஆம் தேதி அரசாங்கம் அறிவித்தது முதல் சிலர் அன்றாட உணவுக்காக பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகிறார்கள்.

அவர்களுக்கு உதவும் பொருட்டு மலேசியாவில் உள்ள முதன்மை இயக்கங்கள் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில் பகாங் மாநில மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர் பிரிவு துணைத் தலைவரும் ரவுப் தொகுதி இளைஞர் பகுதி தலைவருமான தர்மராஜா தம்மால் முடிந்த உதவியை முன்னெடுத்து வருகிறார்.

முன்னர் ரவுப் மாவட்டத்தில் இருக்கும் 15 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கியவர், இன்றும் 24 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கினார்.

நீங்களும் இம்மாதிரியான சேவையை முன்னெடுத்தால் உங்களுக்கான அங்கீகாரத்தை வழங்க அநேகன் தயாராக இருக்கின்றது.