கோலாலம்பூர், 30 மார்ச் – ஆஸ்ட்ரோ கோ மற்றும் NJOI உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக 1 ஏப்ரல் 2020 அன்று ஆஸ்ட்ரோ தனது அலைவரிசை எண்களை மறுசீரமைக்கின்றது. 100-க்கும் மேற்பட்ட எச்டி அலைவரிசைகள் இருக்கையில் மிகவும் எளிதான மற்றும் விரைவான முறையில் அவ்வலைவரிசைகளை அணுக அவையாவும் உயர் இடத்திற்கு மாற்றப்படும்.

மிகவும் சுலபமான முறையில் எச்டி/எஸ்டி அலைவரிசைகளைக் கண்டறிய எச்டி அலைவரிசை எண்ணில் 20-ஐ சேர்க்க வேண்டும் (சீன அலைவரிசைகளுக்கு + 40). உதாரணத்திற்கு;

⦁ Astro RIA HD தற்பொழுது அலைவரிசை 104-இல் உள்ளது மற்றும் Astro RIA தற்பொழுது அலைவரிசை 124-இல் உள்ளது (Astro RIA HD அலைவரிசை எண்ணிலிருந்து 20-ஐ சேர்க்கவும், 104+20).

⦁ HBO HD தற்பொழுது அலைவரிசை 411-இல் உள்ளது மற்றும் HBO தற்பொழுது அலைவரிசை 431-இல் உள்ளது (HBO HD அலைவரிசை எண்ணிலிருந்து 20-ஐ சேர்க்கவும், 411+20).

வாடிக்கையாளர்கள் அனைத்து அலைவரிசை எண்களையும் இங்கே காணலாம்:

⦁ WhatsApp – +603 9543 3838 எனும் தொலைபேசி எண்ணுக்கு ‘Hi’ என்று WhatsApp செய்வதோடு பட்டியலை (menu) பின்தொடர்ந்த “புதிய அலைவரிசை எண்கள்” என்பதைத் தேர்வு செய்க.

⦁ வலைத்தளம் –  http://astro.com.my/new-number

⦁ அலைவரிசை 100 – உங்களது ஆஸ்ட்ரோ பெட்டியில் அலைவரிசை 100 -இன் வழி புதிய அலைவரிசை எண்களின் பட்டியலை அணுகுக.

மறுசீரமைத்தல் தொலைக்காட்சி காணும் அனுபவத்தை பாதிக்காது, மேலும் வாடிக்கையாளர்கள் திட்டமிட்ட பதிவுகளையும் பதிவுசெய்யப்பட்ட நிரல்களையும் தடையின்றி தொடர்ந்து கண்டு மகிழலாம். புதிய அலைவரிசை எண்களின் மேல் விபரங்களுக்கு http://astro.com.my/new-number எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.