சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் சலுகைகளும் உதவிகளும் தேவைப்படுகின்றன!

கோலாலம்பூர், ஏப். 1-

‘பந்துவான் பிரிஹாதின் நேஷனல்’ பொருளாதார ஊக்கத் திட்டத்தை அரசாங்கம் அறிவித்து இருந்தாலும், இத்திட்டங்கள் பி40 எம்40 மக்களுக்கே மிகவும் உறுதுணையாக இருக்கின்றன. இதனை மைக்கி வரவேற்கிறது. இருப்பினும் வியாபாரிகள் நஷ்டங்கள் படும்பொழுது, அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பொழுது, பொருளாதார ஊக்கத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசாங்கம் தடுமாறும். ஆதலால் அரசாங்கம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலன்களையும் சற்று சீர்தூக்கி பார்க்க வேண்டும் என மைக்கியின் தேசிய தலைவர், நேற்று நடைபெற்ற நிதியமைச்சருடனான வீடியோ சந்திப்பு கூட்டத்தில் இதனை வலியுறுத்தினார்.

அரசாங்கம் சிறப்பு நிவாரண வசதி (எஸ்.ஆர்.எஃப்) எனும் கடனுதவி திட்டத்தை அறிவித்திருந்தாலும், இதனால் பயன் அடையப்போகும் நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களே. இந்திய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களுக்குள் அடங்கும். ஒரு மாத காலத்திற்கு வியாபார செய்யாத நிலையில், கடன் பெற்று மேலும் கடன்காரர்கள் ஆவதற்கு பதிலாக சிறிய நிறுவனங்கள் வியாபாரத்தை கைவிடும் அளவிற்கு தள்ளப்படும். ஆதலால் அரசாங்கம் மைக்கியின் ஆலோசனைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

இப்பொழுது அனைத்து வியாபாரிகளுக்கும் இருக்கும் பிரச்னை, வியாபாரம் செய்யாமல் நிலையான செலவு எனும் கூறப்படும் பணியாளர்களுக்கான ஊதியம், வாடகை செலவு, மின்சார செலவு மற்றும் பலவிதமான செலவுகளை கண்டிப்பாக ஏற்க வேண்டிய நிலையில் உள்ளது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இவ்வாரம் நடக்க இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் அரசாங்கம் இதற்க்கு ஒரு தீர்வு காண வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது. குறைந்தபட்ஷம் இந்த சுமைகளை தீர்வுகாண அரசாங்கம் முனைப்புக்காட்டவேண்டும் என அவர் நேற்று நடைபெற்ற நிதியமைச்சருடனான வீடியோ சந்திப்பு கூட்டத்தில் வலியுறுத்தினார்.

நேற்றய கூட்டத்திற்கு பிறகு மைக்கி எழுத்துப்பூர்வமாக 5 சிக்கல்களை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர்நோக்கும் சவால்களும் அதை எதிர்கொள்ளும் ஆலோசனைகளும் அதில் வழங்கப்பட்டுள்ளன.