அமெரிக்காவில், மலாயா புலிக்கும் கோவிட்-19

0
30

மனிதர்களை மட்டுமே பாதித்துவந்த கோவிட்-19 நோய் தொற்று தற்போது, அமெரிக்காவின் நியு யோர்க்கிலுள்ள புரோங்ஸ் மிருகக்காட்சி சாலையிலுள்ள 4 வயது புலிக்கும் ஏற்பட்டிருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மலாயா புலி வகையைச் சேர்ந்த நாடியா எனும் அப்பெண் புலிக்கு அத்தொற்று ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவிய முதலாவது சம்பவமாக பார்க்கப்படுகின்றது.

நாடியா மட்டுமின்றி சிபெரியா புலி வகையைச் சேர்ந்த அதன் அக்கா அசூலுக்கும் ஆப்பிரிக்காவின் மூன்று சிங்கங்களுக்கும் கடும் இருமல் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் அவையனைத்தும் குணமடையும் என அமெரிக்காவின் தேசிய கால்நடை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

நாடியா புலிக்கு அதன் பராமரிப்பாளரிடமிருந்து அத்தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக, பிபிசி குறிப்பிட்டுள்ளது.