கோலாலம்பூர், எப் 14 –

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் ஏப்ரல் 11 முதல் மாலை 4 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் பிரபலமான உள்ளூர் பிரபலங்களைக் கொண்ட தனித்துவமிக்க, ஒரு புதிய மினி தொடரான ​​‘டுவிஸ்ட்டு’-ஐக் கண்டு மகிழலாம். இப்புத்தம் புதிய மினி தொடர் ஒவ்வொரு நாளும் புதிய அத்தியாயத்துடன் மலரவுள்ளது.

‘என் வீட்டுத் தோட்டத்தில்’ மற்றும் ‘சுஹமாய் சுப்புலட்சுமி’ இயக்குனர் கார்த்திக் ஷாமலன் கைவண்ணத்தில் மலர்ந்த ‘டுவிஸ்ட்டு’ நன்கு அறியப்பட்ட மலேசியத் திரைப்பட ஆளுமைகளின் ஆக்கபூர்வமானக் கதைச் சொல்லும் திறன்களைச் சோதனைக்கு உட்படுத்துகிறது:

⦁ ‘புலனாய்வு’ புகழ் ஷாலினி பாலசுந்திரம், இயக்குனர்;
⦁ பால கணபதி வில்லியம், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்;
⦁ ‘வெண்பா’ புகழ் கவி நந்தன், இயக்குனர்;
⦁ ‘Love in 12 Hours’ குறும்பட இயக்குனர் மதன்;
⦁ ஆர்.எம்.எஸ் சரா, இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்;
⦁ குபேன் மகாதேவன், நடிகர்; மற்றும்,
⦁ டேனேஸ் குமார், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தொகுப்பாளர்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு புகழ்பெற்ற உள்ளூர் கலைஞர்களும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் அற்புதமான திருப்பங்கள் (‘டுவிஸ்ட்டு’) கொண்ட கதைகளைக் கூறுவர். அத்தியாய திருப்பங்களில் புதிய கதாபாத்திர அறிமுகங்கள் உட்பட பல சிறப்பம்சகள் உள்ளடங்கும் – கதாநாயகர்கள் மற்றும் வில்லன்கள், சஸ்பென்ஸ் கூறுகள், அறிவியல் புனைகதை அம்சங்கள், நிஜ வாழ்க்கை இணைப்புகள் மற்றும் பல. பின்வரும் ஒவ்வொரு அத்தியாயத்தையும் புதிய கலைஞர்கள் ஏற்கனவே கூறப்பட்ட முழுமையற்ற கதை டுவிஸ்ட்டிலிலிருந்து ஆக்கப்பூர்வமாகத் தொடர வேண்டும்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (MCO) போது மலேசியர்களை பாதுகாப்பாக வீட்டில் இருப்பதை ஊக்குவிக்க ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்துத் உற்சாகமான மற்றும் பொருத்தமான உள்ளடக்கத்தை வழங்கி வருகிறது.