மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி

புதுடில்லி, ஏப். 14-

கொரோனா நோய் தொற்றலைத் தடுக்கும் விதமாக இந்தியா நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த ஊரடங்கை மே 3ம் தேதி வரையில் நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தேசிய அளவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகப் மோடி அறிவித்திருந்தார். தற்போது அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.