Thursday, July 2, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > கோவிட் 19 : இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா
உலகம்முதன்மைச் செய்திகள்

கோவிட் 19 : இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா

புதுடில்லி, ஏப். 15-

இந்தியாவில் அடுத்த 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 38 பேர் பலியாகி உள்ளனர்.

இதனால் கொவிட்-19 தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 11,439 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9,756 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1,306 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 377 ஆக உயர்ந்து உள்ளது. இதனை அந்நாட்டு சுகாதார, குடும்பநல அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் நேற்றைய மொத்த பாதிப்பில் 10 %க்கும் கூடுதலாக ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *