இரண்டு மில்லியன் பேரைத் தாக்கிய கோவிட்-19

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 தொற்று 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்த கொடிய நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அறிவியலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அதன் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2,000,336 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுவரையிலும் 484,757 பேர் குணமாகியுள்ளனர். 126,760 பேர் மரணமடைந்துள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் மட்டும் 614,246 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,407 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,047 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here