கோலாலம்பூர், ஏப். 16-

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றி எல்லோரும் ஒத்துழைப்பை வழங்கினால் கோவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வாய்ப்பினை மலேசியா கொண்டுள்ளது.

தற்போது அந்த நோயினல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையும் வேளை அது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் எதிரொலி என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ அடாம் பாபா கூறினார்.

கோவிட்-19 நோயாளிகள் முழுமையாக குணமாகும் வரை மருத்துவப் பணியாளர்கள் கடுமையாகப் போராடும் வேளை, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பொது மக்கள் சுயத் தூய்மையைப் பேணும் அதே வேளை ஒருவர் மற்றுவருக்கான 1 மீட்டர் இடைவெளியைத் தொடர்ந்து கடைபிக்க அவர் அறிவுறுத்தினார்.