ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > நவீனுக்காக வருந்துகிறேன்! ஏ.ஆர். ரஹ்மான்
கலை உலகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நவீனுக்காக வருந்துகிறேன்! ஏ.ஆர். ரஹ்மான்

கோலாலம்பூர், ஆக. 30-

தம்மைப் போல இசையமைப்பாளராக உருவாக வேண்டுமென்ற கனவும் இருந்த நவீனின் மரணம் தம்மை வெகுவாகப் பாதித்துள்ளது. அவருக்காக தாம் வருந்துவதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூறினார்.

பினாங்கில் 5 பேர் கொண்ட கும்பலால் பகடிவதை செய்யப்பட்ட நவீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் தீவிர ஏர்.ஆர். ரஹ்மான் ரசிகர். அவரைப் போல தாமும் இசையமைப்பாளராக வேண்டுமென்ற கனவுடன் நவீன் இருந்தார்.

இந்த விவரத்தை சமூக தளம் மூலமாக அறிந்து கொண்ட, ஏ.ஆர்.ரஹ்மான், நவீன் நலம்பெற வேண்டுமென தமது டுவிட்டர் அகப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட சில மணி நேரத்தில் நவீன் மருத்துவமையில்  உயிரிழந்தார். இந்நிலையில் ஓன் ஹார்ட் இசை திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கான ஏ.ஆர்.ரஹ்மான் மலேசியா வந்திருந்தார்.

அவருடனான செய்தியாளர் சந்திப்பு, தலைநகர் மெட்ரின் ஒரியண்டெல் தங்கும் விடுதியில் நடந்தது. அப்போது, நவீன் குறித்து ஏ.ஆர். ரஹ்மானிடம் கேட்கப்பட்டது.  நவீனின் மரணம் தம்மை வெகுவாகப் பாதித்ததாக அவர் கூறினார். அதோடு, அவரது குடும்பத்தினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். இனி இப்படிப்பட்ட துயரங்கள் நிகழக்கூடாது என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்தார்.

முன்னதாக இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமையை வெளிக்கொண்டுவருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஹாலிவுட்டில் மைக்கல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி தி இஸ் இட் என்ற பெயரில் இசைத்திரைப்படமாக வெளியானது. அதே போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

ஒன் ஹார்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைத்திரைப்படத்தில் அமெரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹமான் தலைமையிலான இசை சுற்றுப்பயணம், இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்தியேக பேட்டிகள் ஆகியவை இடம்பெற்றன. திரையுலகில் தனது 25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதன் நினைவாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இது ஒரு தொடக்கம்தான். இதற்கு மக்கள் தரும் ஆதரவின் அடிப்படையில் இது தொடருமென ரஹ்மான் தெரிவித்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் மன்றமான ரஹ்மானிக் மலேசியாவிற்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இந்த ஓன் ஹார்ட் திரைப்படத்தை மாலிக் ஸ்ரிம் கார்ப்ரேஷன் வெளியிடுகின்றது. இதன் அறிமுக நிகழ்ச்சியில் சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ், டத்தோ அப்துல் மாலிக், பாடகர் ஹரிச்சரண் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மலேசிய ரசிகர்களுடன் இணைந்து ஓன் ஹார்ட் திரைப்படத்தை ரஹ்மான் கண்டு களித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன