கோவிட் 19 : இன்று 57 சம்பவங்கள் பதிவு! இருவர் மரணம்!

புத்ராஜெயா, ஏப் 30-

மலேசியாவில் இன்று கோவிட் 19 நோய் தொற்று காரணமாக 57 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.

இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,002 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1,729 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களின் 36 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 14 பேர் செயற்கை சுவாச உதவியை பெற்றுள்ளார்கள் என டாக்டர் நோர் ஹிசாம் கூறினார்.

இந்த நோய் தொற்றின் காரணமாக இன்று நண்பகல் 12 மணி வரையில் இருவர் மரணமடைந்துள்ளார்கள். இதனால் இந்நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 84 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,171ஆக அதிகரித்துள்ளது. இது 69.49 விடுக்காடு ஆகும்.