கோலாகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினராக நேருஜி முனியாண்டி நியமனம்.

கோலாகங்சார், ஜூன் 18-

தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் தேசிய முன்னணி அங்கம் பெற்றிருப்பதைத் தொடர்ந்து மஇகா தலைவர்கள் பலர் அரசுசார் நிறுவனங்களின் இயக்குநர்களாகவும், நகராண்மைக் கழக உறுப்பினர்களாகவும், சிறப்பு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மஇகாவின் பாரம்பரிய நாடாளுமன்றத் தொகுதியான சுங்கை சிப்புட்டை உட்படுத்தியிருக்கும் கோலாகங்சார் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டனர். அதில் பேரா மாநில மஇகாவின் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் நேருஜி முனியாண்டி நகராண்மைக் கழக உறுப்பினராகப் பதவி உறுதிமொழி எடுத்து கொண்டார்.

மனிதவள நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டதாரியான இவர், பல்நாட்டு நிறுவனம் ஒன்றின் மனிதவள இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார்.

சுங்கை சிப்புட் மட்டுமின்றி பேரா முழுவதும் நன்கு அறிமுகமான நேருஜி, 2014ஆன் ஆண்டு தேசிய மஇகா இளைஞர் பகுதியின் தரச்செயல்பாட்டுப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு சுங்கை சிப்புட் தொகுதி மஇகாவின் இளைஞர் பகுதித் தலைவராகப் பொறுப்பேற்ற இவர், அதே ஆண்டு பேரா மாநில மஇகா இளைஞர் பகுதித் தலைவராகவும் நியமனம் பெற்றார்.

தன்னுடைய பதவி காலத்தில் பேரா மஇகா இளைஞர் பகுதியைப் வலுப்படுத்த மும்முரமாகச் செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டார். கல்விசார் உதவிகள், தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவிகள், தொழில்முனைவோர் உருவாக்கம், பிறப்புச் சான்றிதழ் பிரச்சனை என பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இவர் தொடர்ந்து உதவிகரம் நீட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here