ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணம் – மலேசிய இந்து சங்கம்

கோலாலம்பூர், ஜூன் 19-

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21.06.2020ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. அன்று மலேசிய நேரப்படி பிற்பகல் 2.50 மணி முதல் மாலை 4.54 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

மலேசியாவில் தெரியும் இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. மேலும், கர்ப்பிணி பெண்கள் அவசியம் இன்றி வெளியில் நடமாட வேண்டாம். கிரகணம் நிகழும் நேரத்தில் உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள ஆலயங்கள், கிரகணம் முடிந்து மாலை 6 மணிக்குப் பிறகு ஆலயத்தைச் சுத்தம் செய்து அபிஷேகங்களையும் பூஜையும் செய்யலாம் என தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here