மின்னலின் காலைக் கதிரில் தந்தையர் தின கொண்டாட்டம்- தந்தையின் அன்பின் பின்னே!

தந்தையர் தினத்தை முன்னிட்டு மின்னலில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அந்த வகையில் மின்னலின் காலைக் கதிரில் காலை மணி 8.30க்கு சிறப்பு நேர்காணல் இடம் பெற்றன.

இதில் இளம் அப்பா மருத்துவர் பரன் மற்றும் 80 ஆம் ஆண்டுகளில் கால்பந்தாட்டத் துறையில் அதிக நாட்டம் செலுத்திய முன்னால் கால்பந்து ஆட்டக்காரர் திரு ஃபெதியநாதன் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சின் தலைப்புக்கேற்ப தாங்கள் கடந்து வந்த பாதைகள், அவர்களுடைய வெற்றிக்கு காரணமாக விளங்கிய தந்தையின் அர்பணிப்பு, தியாகங்கள் போன்றவற்றை உருக்கமாக பகிர்ந்துக் கொண்டனர்.

வருமையில் வாடினாலும் அப்பா என்ற கடமையிலிருந்து தவறாமல் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கிய ஃபெத்தியநாதன், பிள்ளைகள் கடவுள் நமக்கு அளித்த மிக பெரிய சொத்து. அவர்களின் வெற்றிக்கு எப்பொழுதுமே நாம் முதுகெலும்பு போல உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இளம் பெற்றோர்களை கேட்டுக்கொண்டார்.

டாக்டர் பரன், இளம் பெற்றோராக இரும் வேளையில், தந்தையர்களின் தியாகத்தை எப்பொழுதுமே கருத்தில் கொண்டு , அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று உருக்கமாக கூறினார்.

அவருடைய அப்பா அவரை விட்டு காலம் சென்று பல ஆண்டுகள் ஓடினாலும் அவருடைய நினைவுகளை இன்னும் நெஞ்ஞில் பசுமையாக சுமந்துவருகிறேன் ஆக, இருக்கும் போதே அனைத்து உறவுகளையும் மதிப்போம்; நிறைய மகிழ்வான தருனைகளை உருவாக்குவோம் என்றும் பகிர்ந்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியை வழி நடத்தினார் அறிவிப்பாளர் சத்யா. இன்றும் என்றும் தன் குடும்பத்திற்காக வாழும் அனைத்து அப்பாக்களுக்கும் மின்னலின் தந்தையர் தின வாழ்த்துகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here