மலாய் சமூகத்தின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கவில்லை! – துன் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா ஜூலை 1-

நம்பிக்கை கூட்டணியின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பொருத்தமான பிரதமர் வேட்பாளர் அல்ல என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மீண்டும் கூறியுள்ளார்.

ஏனெனில் அன்வார் மலாய்க்காரர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
சி.என்.பி.சி.க்கு அளித்த பேட்டியின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதோடு “அவர் (அன்வார்) மலாய்க்காரர்கள் உடன் மிகவும் பிரபலமாக இல்லை. இப்பொழுது எந்த ஒரு கட்சியும் தேர்தலில் வெற்றிபற மலாய்க்காரர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.”

“அவர் பிரபலமாக இல்லாததால் அதோடு பல இனங்களைப் பிரதிநிதிக்கும் கட்சியின் தலைவராக இருப்பதால் இந்தத் தேர்தலில் வெற்றிபற அவருக்கு மலாய்க்காரர்களின் தலைவரான ஒருவர் தேவை” என்று மகாதீர் குறிப்பிட்டார்.

பிரதமர் வேட்பாளருக்கான தகுதி தமக்கு உள்ளதாகக் கூறிய மகாதீர், மலாய்க்காரர்களின் ஆதரவை நமமால் பெற முடியும் என கூறினார்.

நம்பிக்கை கூட்டணியில் தாம் இணைந்தால் மட்டுமே கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற முடிந்ததாகவும் 60 ஆண்டுகால ஆட்சிக்கு விடை கொடுத்ததாகவும் மகாதீர் தெரிவித்தார்.