ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் கள்வனை கண்டுப்பிடி

திங்கள், 6 ஜூலை
தமிழ்லட்சுமி (புதிய அத்தியாயம் – 17)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), திங்கள்-வியாழன், 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ஜஸ்மீன் மைக்கல், ஹேமாஜி & மூன் நிலா
தமிழ் லெட்சுவைச் சந்தித்து மாயாவைப் பற்றின விபரங்களைச் சொல்கிறார். ஏமி தனது பழைய நண்பரை ஒரு சந்தையில் சந்திக்கிறார். கணேஷ் யாஷுவுடன் பேச முயற்சிக்கிறான். ஆனால் யாஷுவோ வழக்கத்தை விட மிகவும் கவலையாக உள்ளாள். மாயா முனியம்மாவின் தொலைபேசியைப் பயன்படுத்துவதோடு அவருக்கு உதவாததால் மாயாவை அவர் திட்டுகிறார். லெட்சு தனது சட்ட நிறுவனத்தில் மற்றொரு வாடிக்கையாளருடன் உரையாடுகிறார்.

கள்வனை கண்டுப்பிடி (புதிய அத்தியாயங்கள் – 5-9)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), திங்கள்-வெள்ளி, 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: லிங்கேஸ்வரன் மணியம் & பாஷினி சிவகுமார்
சதுர்வா அமோனைப் பற்றி விஷானை எச்சரிக்கிறார். இவ்விஷத்தில் அனிலை ஈடுபடுத்த வேண்டாம் என்று அவருக்கு நினைவூட்டுகிறார். பார்த்திபனின் வழக்கை விஷான் தீர்க்கிறார். பரம் டான்யாவைச் சந்திக்கும்போது ஏதோ சரியாக இல்லை என்பதனை உணர்கிறார்.

வியாழன், 9 ஜூலை
ஊஞ்சடா சமன் (முதல் ஒளிப்பரப்பு / ப்ரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), 9pm
நடிகர்கள்: சன்னி சிங், மான்வி கக்ரூ, சௌராப் சுக்லா, கரிஷ்மா சர்மா & ஐஸ்வர்யா சகுஜா
திருமணமாகாத 30 வயதான வழுக்கையுடைய சமன் கோலி, ஒரு அழகான மனைவியைத் தேடுகிறார். ஒரு ஜோதிடர் தனக்கேற்ற ஒரு மனைவியை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என்றும் இல்லையேல் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்றும் ஒரு காலக்கெடுவை அளிக்கவே அவர் நிலமை இன்னும் மோசமடைகிறது.

அதையும் தாண்டி புனிதமானது (முதல் ஒளிப்பரப்பு / ப்ரிமியர்)
Astro First (அலைவரிசை 480)
நடிகர்கள்: வேமண்ணா அப்பன்னா, யுவராஜ் கிருஷ்ணசாமி, வனேசா க்ரூஸ் & சதிஸ் ராவ் சின்னயா
ஒரு புத்திசாலித்தனமான கருவுறுதல் கிளினிக் உரிமையாளர் ஒரு வேலையற்ற மற்றும் மகிழ்ச்சியான-அதிர்ஷ்டசாலி பையனை விந்து தானம் செய்ய ஒப்புக்கொள்ளச் செய்கிறார். ஆனால், அதன்பிறகு அப்பையனின் வாழ்க்கை சிக்கலாகிறது.

வெள்ளி, 10 ஜூலை
செத்தும் ஆயிரம் பொன் (முதல் ஒளிப்பரப்பு / ப்ரிமியர்)
ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: நிவேதிதா சதீஷ், ராதா கிருஷ்ணன் & அவினாஷ் ரகுதேவன்
இந்தியாவில் ஒரு பண்டையத் துக்கச் சடங்குகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு பேத்தி மற்றும் அவரது பாட்டியை மையமாகக் கொண்ட ஒரு உணர்ச்சிபூர்வமான கதை.

சனி, 11 ஜூலை
அடுத்த சாட்டை (அலைவரிசை முதல் ஒளிப்பரப்பு / ப்ரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.30pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சமுத்திரக்கனி, தம்பி ராமையா & அதுல்யா ரவி
ஒரு கல்லூரி பேராசிரியர் பெற்றோரிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாத தனது மாணவர்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார்.

நக்கீரன் – திருடர்கள் ஜாக்கிரதை (புதிய அத்தியாயம் – 11)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
வழிப்பறிக் கொள்ளை, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் என திருட்டு அல்லது கொள்ளை போன்ற குற்றவியல் பற்றிய விவாதம். இவ்வத்தியாயங்கள் கொள்ளை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் நடக்கும் விரிவான திட்டமிடல் குறித்தும் கவனம் செலுத்தும்.

ஞாயிறு, 12 ஜூலை
குற்றம் குற்றமே – கோபத்தால் சாலையில் ஏற்படும் கடுங் குற்றங்கள் (புதிய அத்தியாயம் – 9)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 8pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
சாலையில் ஒரு ஓட்டுனரின் ஆத்திரத்தால் ஏற்படும் பின்விளைவுகள் – சோங் குணாவின் பாதையில் செல்லவே குணா விரைந்து செயல்பட்டதால் விபத்தைத் தடுக்க இயன்றது. இருவரும் சாலையில் சொற்கள் மற்றும் கை அசைவுகள் இரண்டையும் ஒரு காரிலிருந்து இன்னொரு காரிர்க்கு பரிமாறிக்கொள்ளவே நிலமை இன்னும் மோசமாடைந்தது. அவர்களின் நடவடிக்கைகள் மற்ற சாலை பயனர்களால் பதிவு செய்யப்பட்டன. குணா மற்றும் கீதா ஆகியோரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். தன் நடவடிக்கையின் பின்விளைவை எண்ணி அவர் வருந்தினார்.