இளைஞர்களின் ஆதரவு நமக்குச் சாதகமாகியுள்ளது! டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர், ஜூலை –

அண்மையில் நடந்த சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி மிகப்பெரிய பெரும்பான்மையின் வெற்றி பெற்றுள்ளது. இஃது இளைஞர்களின் ஆதரவு நம் பக்கம் திரும்பி உள்ளது என்பதைக் காட்டுவதாக மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காகப் பல்வேறான வதந்திகளும் பொய் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தன. இளைஞர்கள் நமக்கு எதிராகத் திரும்பினார்கள். இதனால் நாம் தோல்வி கண்டோம்.

ஆனால் தற்போதைய சூழ்நிலை முழுமையுமாக மாறி உள்ளது. கடந்த பொதுத் தேர்தலை ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போது இளைஞர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு திரும்பியுள்ளது என்றார் அவர்.

சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பெல்டா குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் இளைஞர்கள் வெளியேறி தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளார்கள். அணிதிரண்டு வெளிவந்து அவர்கள் வாக்களிப்பது நம்மீது இளைஞர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுவதாக அவர் கூறினார்.

12650 வாக்குகள் பெரும்பான்மையில் சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்துப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் கையிருப்பு தொகையை (டெபாசிட்) இழந்துள்ளார்கள் என்பதையும் டத்தோஸ்ரீ தன் இந்திரன் சுட்டிக்காட்டினார்.

இந்த வெற்றிக்கு முன் முதற்காரணம் போஸ் கூ என அழைக்கப்படும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தான். போஸ் கூ என்பது அடையாளம் அல்ல அஃது ஒரு மேம்பாடு என்றும் டத்தோஶ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.