நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அன்வார்!

பெட்டாலிங் ஜெயா ஜூன் 6

நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தேர்ந்துதெடுக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாரிசான் கட்சியின் தலைவர் ஷாஃபி அப்டால் உட்பட மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அனைத்து தரப்பினரிடமும் கலந்துரையாட முழு அனுமதி பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டது.

முன்னதாக வாரிசான் கட்சியின் தலைவர் ஷாஃபியை பிரதமர் வேட்பாளராக நியமிக்கும் திட்டம் குறித்தும் இன்று விவாதிக்கப்பட்டது.

முன்னதாக மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை நிர்மாணிப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இதில் அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என உச்ச மன்றம் முடிவு செய்தது.

முடிவு எடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு, ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.